நெல் ஜெயராமன் மரணம்: இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் இன்று அதிகாலை (வியாழன், 06.12.2018) காலமானார். அவருக்கு வயது 50. அதிகாலை 5.23 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்து காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வந்த நெல் ஜெயராமன் கடந்த 2 ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது சிகிச்சைக்கு பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் பலர் நிதியுதவி செய்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 5.23 மணி அளவில் ஜெயராமனின் உயிர் பிரிந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டியை அடுத்த ஆதிராம்மங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் சீடர் ஆவார். மிக எளிய கூலித் தொழிலாளியான நெல் ஜெயராமன், ஒரு கட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகளைக் காப்பதற்கு களமிறங்கி தீவிரமாக பணியாற்றி வந்தார்.

இவர் 169 அரிய வகை நெல் விதைகளை சேகரித்து வைத்திருக்கிறார். ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி அரிய வகை நெல்களை பிரபலப்படுத்துவார். இதற்காக தேசிய, மாநில விருதுகளை பெற்றுள்ளார். 2011- ம் ஆண்டு சிறந்த கரிம விவசாயிக்கான மாநில விருதை பெற்றார். அதன்பின், 2015-ம் ஆண்டு சிறந்த மரபணு ரட்சகர் தேசிய விருது பெற்றார்.

 

 

குளிர்கால கூட்டத்தொடர்: முதல்வர் தலைமையில் அதிமுக எம்பிக்கள் கூட்டம்

நெல் ஜெயராமன் மறைவு தமிழக விவசாய மக்களுக்கு பேரிழப்பு : மு.க. ஸ்டாலின் இரங்கல்..

Recent Posts