நெஞ்சு பொறுக்குதில்லையே -2 : சமயபுரத்தான்

newspaper_cuttingஇந்திய நாட்டின் நீதித்துறை வழங்கும் சில கருத்துகளைப் பார்க்கும்போது (அது கருத்துகளா?தீர்ப்புகளா?) சிலவற்றைப் புரிந்துகொள்ளமுடியவில்லை.

அ .  உச்சநீதிமன்றம் குற்றப்பின்னணி உடையவர்களை அமைச்சராக நியமிக்க கூடாது என ஒருவர் தொடர்ந்த வழக்கில், மூவர் கொண்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பாயம், குற்றப்பின்னணி கொண்டவர்களை அமைச்சர்களாக நியமிக்கக் கூடாது என கூறமுடியாதென்றும், ஆயினும் பிரதமர் அத்தகையவர்களுக்கு பதவியை மறுப்பது தான் இன்றைய மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.மேலும் ஊழல்,லஞ்சம் மிகுந்துள்ள இன்றைய சூழலில் மக்கள் பிரதமரிடமிருந்து அதை எதிர்பார்ப்பதாகவும் அவர் மீது பெரும் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். இதே நிலைபாட்டை மாநில முதல்வர்களும் செய்யவேண்டுமெனவும் கூறியுள்ளனர்.

ஆ .இரண்டு நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்ட இரண்டு காஞ்சிமட சங்கராச்சாரியார்கள் மீதும் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுவதில்லை என மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கருத்துரைத்துள்ளார். இதில் பல சட்ட நிபுணர்களும், அரசு வழக்குரைஞர்களும் இதை ஏற்கவில்லை. ஒரு பொது வழக்கமாக மேல்முறையீடு செய்வது தான் சரி எனவும்,.வாழ்நாள் முழுதும் அரசு வழக்குரைஞராகப் பணி புரிந்த ஒருவர் இது போன்று எந்த வழக்கிலும் மேல்முறையீடு தவிர்க்கப்பட்டதில்லை என்றும் கூறியுள்ளார். இன்னொரு செய்தி, இச்சம்பவம் நடந்தது தமிழகத்தின் காஞ்சிபுரத்தில், வழக்கு நடந்தது புதுச்சேரியில். ஆனால் இதில் ஆஜரான அரசு வழக்குரைஞர் புதுவை அரசினர் .ஆனால் அவர் கருத்தோ,தமிழக அரசு வழக்குரைஞர் மற்றும் அட்வகேட் ஜெனரல் கருத்தோ கேட்கப்படவில்லை. பலர் எழுப்பும் வினா, மேலும் இதில் தில்லி அட்டர்னி ஜெனரல் கருத்து கேட்கப்பட்டதேன் என்பதே..

நாட்டுப்புற இசைவாணர் கொத்தமங்கலம் சுப்பு ஒரு பாட்டுப் பாடுவார்.

“பெரிய மனுசன் தப்பு செஞ்சா பேப்பரிலே போடுறான்: சின்ன

மனுசன் தப்பு செஞ்சா செயிலுக்குள்ளே தள்ளுறான் ஒண்ணும்

புரியவில்ல தம்பி! இந்த ஒலகத்து நடவடிக்க ஒண்ணும் புரியவில்ல

தம்பி !

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*