முக்கிய செய்திகள்

‘நெஞ்சில் துணிவிருந்தால்’.திரைப்படம் நாளை முதல் திரையிடப்படுவது நிறுத்தம்..


‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமானவர், சுசீந்திரன். இவரது இயக்கத்தில் இப்போது ரிலீஸான திரைப்படம், ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்தில், தமிழில் அறிமுக நாயகியாக மெஹ்ரின் நடித்தார்.
மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் அப்புக்குட்டி, சூரி நடித்திருந்தனர். சமீபத்தில் வெளியான இந்தப் படம், சில எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்தது. அதனால் இயக்குநர் சுசீந்திரன் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று வைத்து அதில் ஹீரோயின் வரும் காட்சிகளை எடிட் செய்துள்ளோம் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது, அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸானது. சில தவிர்க்க முடியாத காரணத்தால் இந்தப் படத்தை ரீ-ரிலீஸ் பண்ண ப்ளான் பண்றோம். அடுத்த மாதம் 15-ம் தேதி ரீலிஸாகும். அதனால், நாளையிலிருந்து எந்தத் திரையரங்குகளிலும் இந்தப் படம் ஓடாது’’ என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.