முக்கிய செய்திகள்

நேபாளத்தில் நிலச்சரிவால் சிக்கியுள்ள இந்தியர்கள் மேலும் 96 பேர் மீட்பு..


Janakpur : Passengers walk through the flooded Janakpur airport in Nepal, Sunday, Aug. 13, 2017. Landslides and flooding triggered by heavy rain have killed dozens of people in southern Nepal and left thousands homeless, police said Sunday.AP/PTI(AP8_13_2017_000221B)

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக நேபாளம் சென்ற 1500 இந்தியர்கள், கனமழை மற்றும் நிலச்சரிவால் சிக்கியுள்ள நிலையில், சிமிகாட் பகுதியில் இருந்து 104 பேர் நேற்று மீட்கப்பட்டனர். இந்நிலையில் இன்று மேலும் 96 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மற்றவர்களை மீட்டு இந்தியாவிற்கு திரும்ப அழைத்துவர ஏழு விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நேபாளத்திற்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் பயணத்தை ரத்து செய்யுமாறு இந்திய தூதரகம் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

யாத்திரை சென்ற ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த தமிழர் ராமச்சந்திரன், மற்றும் ஆந்திராவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.