முக்கிய செய்திகள்

நேர்மையான மிருகத்தனம் வேண்டும். : கே. எஸ். இராதாகிருஷ்ணன்…

நேர்மையான மிருகத்தனம் வேண்டும். கே. எஸ். இராதாகிருஷ்ணன்
————————————————
இந்த உலகத்தில் நாம் எத்தனையோ விதமாக வாழ ஆசைப்படுவோம். ஆனால் ஆசைப்படும் எல்லாமே அமைவதும் இல்லை. ஒருவருடைய வாழ்வில் சந்தோஷம், துயரம் மற்றும் வெற்றி, தோல்வி எல்லாமே தொட்டுவிட்டுத்தான் செல்கிறது. இந்த சமூகம் என்ற பொது வெளி வரும்போது நாம் பல விதமான கோணங்களில் பார்க்கப்படுகிறோம். சிலருக்கு பிடித்தவர்களாகவும், சிலருக்கு பிடிக்காதவர்களாகவும் படுகிறோம்.

இந்த நிலையில் பல பாடங்களை நாமும் அறிகிறோம்:

• கால ஓட்டம் சுய நல இருத்தல் பலரை எப்படி எல்லாம் மாற்றி விடுகிறது.

• பெரும் கேடு செய்பவன் விடுபடுகிறான் சிறு தவறு செய்பவன் வன்மையாக தண்டிக்கப்படுகிறான்.

• போலி உறவுகளை நட்புகளை சொல்லி பழகுபவர்கள் சில காலம்தான் நம்மோடு அவர்களின் பயன் கருதி பயணிப்பார்கள்

• பறவைகள் கூட சிறகுகள் இருந்தால்தான் பறக்க முடியும் ஆனால் அதன் சிறகுகளை முறித்து உங்களின் கைகளுக்குள் வைத்துக்கொண்டு பறந்து செல் என்றால் எப்படி பறப்பது?அவ்வண்ணமே நாம் யாருக்கு ஏணியாக இருந்து அவர்களின் உயர்வுக்கு பாடுபட்டமோ அவர்களால் முதுகில் குத்தப்பட்டு தள்ளப்படுவோம். ஆனால், உலகம் நமது துன்பத்திற்கு ஆறுதல் சொல்லாமல் பிழையற்ற நம்மை குறை சொல்லும்.

• நேர்மையான செயல்பாடுகள் கொண்ட தகுதியானவர்கள் திட்டமிட்டு ஒழிக்கப்படுவதும் தொடர்கிறது இங்கு.
இப்படி பல வகையான பாடுகள்…..

ஒருவரிடம் வேலை ஆகும் வரை (வேண்டுமென்றால்)அவரை போலியாக மானே தேனே பொன்மானே போட்டுப் புகழ்ந்து வேலையை முடித்துக் கொள்வது மனித இயல்பு. அத்தகைய உளவியலை முத்தொள்ளாயிரம்
( பாடல் ) கூட சொல்கிறது.

To plainness honour’s bound
When majesty falls to folly( Shakespear-King Lear)

With silence……
be thou politic (Shakespear-Henry lV)

இப்படி பொது வெளியில் பல எதிர் வினைகள்…….
இது தான் உலகம்…….
இதுதான் மக்கள்………
எதிலும் போலியான கட்டமைப்பு…….
பாசாங்குதனமான சமூக அனுகுமுறை……
பிம்பதனமான அமைப்பு முறை…….
பின், எப்படி உண்மையன வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும்?இதையும் எதிர்
கொள்ள நேர்மையான மிருகத்தனம் வேண்டும்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
09.05.2020.
நன்றி
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
முகநுால் பதிவு