முக்கிய செய்திகள்

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி திட்டத்திற்கு முதல்வர் எதிர்ப்பு: மு.க.ஸ்டாலின் வரவேற்பு..

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்துவரும் நிலையில் தமிழக முதல்வர் புதிய கல்விக்கொள்கையில் அறிவித்துள்ள மும்மொழி கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

எத்தகைய சூழ்நிலையிலும் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

மும்மொழி திட்டத்திற்க முதல்வரின் எதிர்ப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

இது குறித்த அவரின் டிவிட் பதிவு

மும்மொழி திட்டத்தை எதிர்த்த முதல்வருக்கு நன்று, புதிய கல்விக்கொள்கையையும் எதிர்க்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மொழிக்கொள்கை மட்டுமல்ல, கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையை பறிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்