புதிய தேசிய கல்விக் கொள்கை ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர் கல்வியை எட்டாக்கனியாக்கும் :கனிமொழி எம்பி..

மத்திய அரசு நேற்று புதிய கல்விக் கொள்கையை அறிவித்தது. நாடுமுழுவதும் பரலாக கல்வியாளர்களிடையே இந்த கல்விக் கொள்கை எதிர்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திமுக மகளிர் அணிச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது டிவிட் பக்கத்தில்

புதிய கல்விக்கொள்கை ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர் கல்வியை எட்டாக்கனியாக்கும் என விமர்சித்துள்ளார்
அவர் வெளியட்டுள்ள டிவிட் பதிவு

34 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றம் கொண்டுவரப் பட்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கையில் ஆக்கப்பூர்வமான எதுவும் இல்லை. குறிப்பாக, அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு, மும்மொழிக் கொள்கை, சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் போன்றவை கல்வித்தரத்தை…

மேம்படுத்தும் அறிவிப்புகளா ? புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம் ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர் கல்வியை எட்டாக்கனியாக்கும் முயற்சி நடக்கிறது.

மாநில உரிமைகள் பறிப்பு, இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு ஆகியவற்றை திட்டமிட்டு செய்து வருகிறது மத்திய பாஜக அரசு. இதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.
என கனிமொழி எம்பி தனது டிவிட்டில் பதிவிட்டுள்ளார்

தங்க விலை சவரனுக்கு ரூ. 224 அதிகரித்து ரூ.40,824 ஆக உயர்வு…

புதிய கல்விக்கொள்கையில் பன்முகத்தன்மை சீர்குலைப்பு : வைகோ குற்றச்சாட்டு..

Recent Posts