புதிய தேசிய கல்விக் கொள்கை மாநில கல்வி உரிமைக்கு எதிராக உள்ளது.:பேரவையில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..

தமிழக சட்டப் பேரவையில் புதிய தேசிய கல்விக் கொள்கை மாநில கல்வி உரிமைக்கு எதிராக உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இரு மொழி கொள்கைக்கு எதிராகவும் உள்ளதாக சட்டப்பேரவையில் ஸ்டாலின் கூறியுள்ளார். 3,5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இவையெல்லாம் தமிழக கல்விமுறையை சீர்குலைக்கக்கூடியவை என அவர் தெரிவித்துள்ளார்.