கரோனா பாதிப்பு, பொருளாதாரத் சரிவு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் நாட்டியதற்கு மோடியின் ‘ஈகோ’ வே காரணம் காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி.,பேட்டியளித்தார்.
மேலும் அவர் மக்களவையில் 304 உறுப்பினர்கள் இருப்பதால் மோடி அரசு யார் சொல்வதையும் காதில் வாக்குவதில்லை. புதிய பாராளுமன்றம் கட்டுவதைக் காட்டிலும் நாடெங்கும் மருத்துவமனைகள் கட்டலாம் என்றார்.
ரஜினி கட்சி ஆரம்பிப்பது குறித்து கேட்ட கேள்விக்கு முதலில் அவர் கட்சி ஆரம்பிப்பாரா என்று பார்ப்போம், ரஜினியின் செயல்பாடுகள் அனைத்திலும் பாஜகவே உள்ளது எனத் தெரிவித்தார்..
முன்னதாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சிவகங்கை நாடாளுமன்ற மாவட்ட காங்கிரஸ் தலைமைகம் புதுப்பிக்கப்பட்டு இன்று கணபதி பூஜை நடைபெற்றது. .
இந்த பூஜையில் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டு அலுவலகம் முன் கொடியேற்றினார்.
விழாவில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் இராமசாமி மற்றும் முன்னாள் சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மாங்குடி உட்பட பல காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அறுசுவைவிருந்து வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை முன்னாள் சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மாங்குடி சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தார்.
கார்த்தி சிதம்பரம் எம்.பி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி
செய்தி படங்கள்
சிங்தேவ்