இராமேஸ்வரத்தில் மீனவர்கள் மத்தியில் பேசிய கமல், ’அரசுகள் வாக்குறுதியை அள்ளி வீசிவிட்டு, அதை ஏன் நீங்கள் நிறைவேற்றவில்லை என கேட்கும் போது, அதை திசை திருப்ப வேறு பிரச்னைகளை வைப்பது வாடிக்கையாகிவிட்டது. மீண்டும் சந்தித்து உங்கள் பிரச்னைகளைப் பற்றி பேசுவேன்’ என்றார்
மீனவர்கள் மத்தியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ’ஏன் இங்கு வந்தேன் என்றால், தமிழகத்தில் மிக முக்கியமானத் தொழில்களில் உங்கள் தொழிலும் ஒன்று. அது பாதுகாக்கப்பட வேண்டும். பாதுகாப்பாக நீங்கள் செய்ய வேண்டும். உங்கள் சுக துக்கங்களை பத்திரிகை வாயிலாக அறிந்து கொள்வதற்கு பதில் உங்களைச் சந்தித்து அறிந்து கொள்ளவே வந்திருக்கிறேன்’ என்றார்.