புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை மைய இயக்குனர் தகவல்…

தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

இதனால் தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னார்வளைகுடா ஆகிய பகுதிகளுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.