கடந்த திமுக ஆட்சியில் புதிய தலைமைசெயலகம் கட்டப்பட்டது. அதில் முறைகேடு நடந்துள்ளதாக முன்னானள் நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
அந்த ஆணையம் செயல்படாததைத் தொடர்ந்து அந்த ஆணையத்தை கலைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவையடுத்து ஆணையம் கலைக்கப்பட்டது. முறைகேட்டை லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்கும் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்கத் தடை கோரி மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி முறைகேடு வழக்கில் மேல்நடவடிக்கை எடுக்க தடைவிதித்தார்.