சீனா,அமெரிக்காவில் பரவிவரும் ஒமைக்ரான் பி.எஃப்-7 என்ற புதிய வகை கரோனா தொற்றால் உலகம் முழுவதும் மிக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்மையில் இந்தியாவிலும் இந்த வகை கரோனா கண்டறியப்பட்டது.
ஒன்றிய அரசும் இது குறித்து எச்சரிக்கை விட்டதுடன் கரோனா கட்டுபாடுகளை தீவிரப்படுத்த மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலாளர் உள்ளி்ட்ட அனைத்து துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
