முக்கிய செய்திகள்

புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் : தென்னக ரயில்வே அறிவிப்பு..

தெற்கு ரயில்வே சார்பில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களும் அதன் நேரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

செங்கோட்டையிலிருந்து சென்னை எழும்பூருக்கு ஜனவரி 1 மற்றும் 15-ம் தேதிகளில் சுவிதா ரயில் இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூர் – செங்கோட்டை இடையே, டிசம்பர் 31 முதல் பிப்ரவரி 25 வரை அனைத்து திங்கள்கிழமைகளிலும் சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது.

மறுமார்க்கத்தில், ஜனவரி 8 முதல் பிப்ரவரி 26 வரை அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும் சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது.