புத்தாண்டு கொண்டாட்டம் : புதுச்சேரியில் நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனைக்கு அனுமதி..

புத்தாண்டு பண்டிகை நெருங்கிவரும் நிலையில் புதுச்சேரியை நோக்கி வெளி மாநிலங்கள் மட்டுமல்லாது,

வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இதனால், புதுச்சேரியில் உள்ள பல நட்சத்திர ஓட்டல்களில், அறைகள் தற்போதே நிரம்பி வழிகின்றன. வழக்கமாக புதுச்சேரியில்,

இரவு 11 மணிக்கு மூடப்படும் மதுபான கடைகள், புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவை தாண்டி 1 மணி வரை திறக்க கலால்துறை சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.

எனினும், அனுமதியின்றி நடன நிகழ்ச்சிகளோ, இசை நிகழ்ச்சிகளோ நடத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட ஓட்டல் உரிம‌ம் ரத்து செய்யப்படும் எனவும், நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

புத்தாண்டில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் விதமாக பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரை பகுதிகளில், 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரயில்வே துறையில் 14 ஆயிரம் இளநிலை பொறியாளா்களுக்கு வேலை வாய்ப்பு..

பூடான் பிரதமருடன் ராகுல் காந்தி சந்திப்பு..

Recent Posts