முக்கிய செய்திகள்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் நடந்தது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.

159 என்ற இலக்குடன் இந்திய அணி ஆட்டத்தை தொடங்கிய நிலையில், அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 28 பந்துகளில் 50 ரன்களும், ஷிகார் தவான் 30 ரன்களும் எடுத்தனர்.

விஜய் ஷங்கர் 14 ரன்களில் அவுட் ஆனார். ரிஷாப் பண்ட் 40 ரன்களுடனும், தோனி 20 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

19வது ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 162 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில்

இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலையில் உள்ளன.