அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் …

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 24.07.2023 அன்று மாலை வடக்கு ஆந்திரா தெற்கு ஓரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது நேற்று(25.07.2023) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது.

மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு ஆகிய காரணங்களால் தமிழகத்திற்கு 31-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 812 பணியிடங்கள் நிரப்ப அரசாணை..

’’உங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும்வரை புதிய கமிட்டியை தொடர்ந்து அமைப்பீர்களா?’’ : ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி…

Recent Posts