முக்கிய செய்திகள்

“என்னுடைய அடுத்த டார்கெட்”: நித்யானந்தாவின் அடுத்த காமெடி ..

தனது அடுத்த டார்கெட் ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் என்று நித்யானந்தா வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

கைலாசா என்ற பெயரில் தனிநாடு அமைக்கப்போவதாக நித்யானந்தா ஆரம்பித்த காமெடி, தற்போது உச்சத்தை தொட்டுள்ளது.

நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து மீம்ஸ்களை வெளியிட்டுவருகிறார்கள். ஆனால், அவற்றை மிஞ்சும்வகையில் வாழைப்பழ காமெடி ரகத்தில் நித்யானந்தா ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

தனிநாடு எங்கே அமைக்கப்போகிறீர்கள் என்று கேள்வி எழுந்த நிலையில், சிவத்தை உணர்ந்தால், உங்களுக்குள் கைலாசா உருவாகும் என்று காமெடியாக பேசி, தனிநாடு கதைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஆனால், தனது அடுத்த டார்கெட் ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் என்று நித்யானந்தா வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

தனது சத்சங்கத்தின் போது, ராவணனை திட்டித்தீர்த்த நித்யானந்தா, ராவணன் ஒரு முட்டாள் என்று குறிப்பிட்டார். மேலும் ராவணன் நேரடியாக கைலாசத்தை தொட்டுத் துாக்க முயன்றான்.

கைலாசத்தில் உள்ள சிந்தாமணி மண்டபம் தான் கைலாசத்தின் அருள்பொலிவுக்கு காரணம் என நினைத்தான். உடனே எனக்கு அந்த மண்டபம் வேண்டும் என சிவனிடம் கேட்டான். சிவனும் எடுத்துக் கொள் என்று கூறிவிட்டார்.

இந்த முட்டாள் ராவணனும் அந்த சிந்தாமணி மண்டபத்தை எடுத்துச் சென்று ஸ்ரீலங்காவில் வைத்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்..