ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நடைபெற்ற கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.
வடமேற்கு நைஜீரியாவில் இரு மதத்தைச் சேர்ந்தவர்களிடையே மோதல் ஏற்பட்டது. துப்பாக்கி ஏந்திய கும்பல் வந்து சுட்டு வீழ்த்தியதில் பலர் உயிரிழந்தனர்.
சில இடங்களில் ஆங்காங்கே சடலங்களாகக் காட்சியளித்தன. இதையடுத்து தேர்தல் நடைபெற உகந்த சூழல் இல்லை என அதிபர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளதாக ஆளுநர் அறிவித்துள்ளார். காணாமல் போன பலரையும் தேடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.