நிர்மலா தேவி யாருன்னே தெரியாதுப்பா: செய்தியாளர் சந்திப்பில் ஆளுநர்..


ராஜ்பவனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தனக்கு நிர்மலா தேவி யாரென்பதே தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி என்பவர், மாணவிகளை பாலியல் செயலுக்குத் தூண்டுவது போன்ற செல்போன் உரையாடல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

அந்த ஆடியோவில் பேராசிரியை தனக்கு ஆளுநரை நன்றாக தெரியும் என்று கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஆர்.சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்தார். இந்நிலையில், இன்று மாலை 6 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்கள், பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஆளுநர், “பேராசிரியை விவகாரத்தில் ஆர்.சந்தானம் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆர்.சந்தானம் மிகவும் நேர்மையான அதிகாரி, ஒரு வாரத்திற்குள் இது பற்றி அறிக்கை சமர்பிக்கப்பட்டு, இதில் தொடர்புடைய அனைவரது மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.