முக்கிய செய்திகள்

நிர்மலா சீதாராமன் பேச்சு மீனவர் உணர்வுகளை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது : மு.க.ஸ்டாலின்..


சென்னை விமான நிலையத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மீனவர்கள் சுடப்பட்ட விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலாவின் கருத்து வேதனை அளிக்கிறது. மீனவர்களை சுடவில்லை எனக்கூறியது அவர்களை அவமானபடுத்துவது போல் உள்ளது. மீனவர்களை கொச்சைபடுத்துவது போல் உள்ளது. இதுவரை நடந்த சோதனை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இவ்வாறு அவர் கூறினார்.