முக்கிய செய்திகள்

நித்யானந்தாவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் : நடிகை கஸ்தூரி நக்கல் டிவிட் ..

சாமியார் நித்யானந்தாவிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சாமியார் நித்யானந்தாவின் ஆஸ்ரமத்தில் இருந்து அவரை கடவுள் போன்று சித்தரித்து பரமசிவோகம் ஒன்னெஸ் கேப்சூல் 50 என்ற ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், அதில், நித்யானந்தாவை கடவுளாக்கி ஆங்கிலத்தில் ஆல்பம் பாடப்பட்டுள்ளது. அவரது ஸ்டைலும் கடவுள் போன்று உள்ளது.

கோவிலுக்குள் இருப்பது போன்று இருக்கும் இந்த ஆல்பத்தில் அவரது ஜடாமுடி மீசை பற்றியெல்லாம், பாடல் பாடப்பட்டுள்ளது.

பரமஹம்ச நித்யான பரிசுந்தா என்ற தொடங்கும் இந்தப் பாடல் இலக்கிய தரத்துடன் வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த கஸ்தூரி நித்யானந்தாவுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று நக்கலாக டுவிட் பதிவு செய்துள்ளார்.