வங்ககடலில் புயலாக மாறியது ‘நிவர்’ : மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையைக்கடக்கிறது…..

தென்மேற்கு வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு நிவர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம்-காரைக்கால் இடையே புதுச் சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என எதிர்பாப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. புயல் கரையைக்கடக்கும் போது மணிக்கு 110 முதல் 130 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் காரணமாக 7 வட கடலோர 7 மாவட்டங்களில் இன்று பகல் 1மணி முதல் அனைத்து போக்குவரத்திற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அசாம் முன்னாள் முதல்வரும் காங்.,மூத்த தலைவருமான அருண் கோகாய் காலமானார்..

7 தமிழர் விடுதலை விவகாரம்: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு…

Recent Posts