முக்கிய செய்திகள்

என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்து விபத்து : உயிரிழப்பு 6-ஆக அதிகரிப்பு

நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தற்போது வரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன. ஏப்ரல் எட்டாம் தேதி பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் விபத்து நடந்துள்ளது.

25 பேர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகின்றன.