தமிழகத்தில் கோயில்களில் பூக்கடை நடத்துவதற்கு அனுமதி இல்லை என இந்து அறநிலையத்துறை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணன், கிருஷ்ணவள்ளி முன்பு புதன்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவில் ஆணையர்களுக்கு, இந்துசமய அறநிலையத்துறை அனுப்பிய சுற்றறிக்கை தாக்கல் செய்யபட்டது. அதில், பிப்ரவரி 2ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தை தொடர்ந்து, அதே மாதம் 12ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் முடிவுக்கு எதிராக இருப்பதால், பக்தர்களின் நலன் கருதி பூ, மாலை உள்ளிட்ட பூஜை பொருட்களை மட்டும் கோவில் வளாகத்தில் செய்யலாம் என அனுமதி வழங்கி ஜூன் 7ஆம் தேதி சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
No flowers sale in temples: TN Govt