முக்கிய செய்திகள்

சுயதொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: பிரதமர் மோடி

தொழில் துவங்குவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் சுய தொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியா மிகப்பெரிய சமூக, பொருளாதார மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நம் நாட்டில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிமை ஆக்கப்பட்டுள்ளன. இதனால் சுய தொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

நாட்டில் வரி கட்டமைப்பை மேம்படுத்தி, தொழில் செய்வதை எளிமையாக்கி உள்ளோம். வங்கி அமைப்புகள் வலிமைபடுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

No., of entrepreneurs increase: Modi