முக்கிய செய்திகள்

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு..

இந்தாண்டு, வேதியியல் துறைக்கான நோபல் பரிசு, மூன்று பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த 97 வயதான ஜான் பி குட் எனஃப்(John B. Goodenough), மற்றும் எம்.ஸ்டான்லி விட்டிங்ஹாம்(M. Stanley Whittingham),

ஜப்பானைச் சேர்ந்த அகிரோ யோஷினோ(Akira Yoshino) ஆகிய மூன்று பேரும், இந்தாண்டுக்கான, வேதியியல் துறைக்கான நோபல் பரிசை பெறுகின்றனர்.

லித்தியம் – அயர்ன் பேட்டரிகளின் மேம்படுத்தப்பட்ட கண்டுபிடிப்பிற்காக மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆஸ்டின் நகரில் வசித்து வரும் 97 வயதான ஜான் பி குட் எனஃப், மூத்த பேராசிரியர் ஆவார்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் வெஸ்டல் நகரில் வசிக்கும் எம்.ஸ்டான்லி விட்டிங்ஹாம், வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

ஜப்பானின் மெய்ஜோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அகிரோ யோஷினோ, லித்தியன்-அயர்ன் பேட்டரியை கண்டுபிடிப்பாளராக திகழ்கிறார்.

இவர்கள் மூவருக்கும், இந்தாண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின், லித்தியம்-அயர்ன் பேட்டரிகளின் பயன்பாடு அதிகளவில் உள்ளது.

இவற்றை மேலும், எடைக்குறைவானதாகவும், அதிக திறன் மிக்கதாகவும், எளிதில் ரீசார்ஜ் செய்யக்கூடியதாகவும் மாற்றியதன் அடிப்படையில், ஜான் பி குட் எனஃப், எம்.ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜப்பானைச் சேர்ந்த அகிரோ யோஷினோவுக்கு, வேதியியல் துறைக்கான நோபல் பரிசு கிடைத்திருக்கிறது.

கடந்த ஆண்டு, தனது 96ஆவது வயதில், இயற்பியல் துறைக்கான நோபல் பரிசை பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆர்தர் ஆஸ்கின் தான், அதிக வயதில், நோபல் பரிசு பெற்றவராக திகழ்ந்தார்.

இந்த சாதனையை, இந்தாண்டு, தனது 97ஆவது வயதில், நோபல் பரிசு பெற்றுள்ள, அதே அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ஜான் பி குட் எனஃப் முறியடித்துள்ளார்.