மூன்று பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

வேதியியல் பிரிவுக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு 3 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுகளை பெறுவோரின் பெயர் அறிவிப்பு அக்.,1 அன்று தொடங்கியது.

வேதியியலுக்கான நோபல் பரிசு ஒரு பெண் உட்பட 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரான்சிஸ் ஹெச். அர்னால்ட், ஜார்ஜ் பி.ஸ்மித், பிரிட்டனை சேர்ந்த கிரிகோரி பி.விண்டர் ஆகியோருக்கு, மனித உடலில், புதிய வேதியியல் பொருட்களை கண்டுபிடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட உள்ளது.

Nobel Prize in Chemistry for Frances H. Arnold, George P. Smith, Sir Gregory Winter