நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2014-இல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் உள்ளதாக தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் செய்துள்ளார்.
நாட்டிலுள்ள அனைத்து கணினிகளையும் இடைமறிக்க, கண்காணிக்க சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கியதை குறிப்பிட்டு, கெஜ்ரிவால் இவ்வாறு விமர்சித்துள்ளார்.