முறைப்படுத்தப்படாத முதலீட்டு திட்டங்களை தடை செய்ய வழிவகுக்கும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
நிதிதுறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை இணைத்து அந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
மசோதா மீதான விவாதத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல், முதலீட்டு திட்டங்கள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும் போது,
எந்த வித ஓட்டைகளும் இல்லாமல் அரசு கவனத்தில் கொள்ளும் என்று உறுதி அளித்தார்.
அங்கீகரிக்கப்படாத முதலீட்டு திட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 978 வழக்குகளில், 326 வழக்குகள் மேற்குவங்க மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இது போன்று அனுமதியில்லாத முதலீட்டு திட்டங்களை முடிவுக்கு கொண்டு வர அரசு வேகமாக பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
விவாதத்திற்குப் பின் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.