பெட்ரோல்,டீசல் விலை தினமும் உயர்ந்து அன்றாடம் பொதுமக்கள் அவதியுறும் நிலையில்
தற்போது தொடர்ந்து 6-வது முறையாக மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டு நேற்று இரவு முதல் 60 ரூபாயும், மானியத்துடன் வழங்கப்படும் கேஸ் சிலிண்டர் விலை ரூ.2.94 பைசா உயர்த்தப்பட்டுளன.
மானியத்துடன் வழங்கப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.2.94 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.
இதன்படி சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததையடுத்து கடந்த 6 மாதங்களாக கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வந்தது. கடந்த மாதம் சிலிண்டர் ஒன்றுக்கு 59 ரூபாய் உயர்த்தப்பட்டநிலையில் இந்த மாதமும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் மானியத்துடன் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. ஒரு சிலிண்டர் எடை 14.2 கிலோ இருக்கும்.
இதன்படி 14.2 கிலோ எடை கொண்ட மானியத்துடன் வழங்கப்படும் சமையல் சிலிண்டர் விலை ஒன்றுக்கு இம்மாதம் ரூ.2.59 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் இருந்து மானியத்துடன் பெறும் சிலிண்டர் விலை ரூ.14.13 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வால், டெல்லியில் மானியத்துடன் வழங்கப்படும் கேஸ் சிலிண்டர் விலை ரூ.505.34 ஆக உயர்ந்துள்ளது.
கொல்கத்தாவில் ரூ.508.70, டெல்லியில் ரூ.503.11, சென்னையில் ரூ.493.87 பைசாவாகவும் உயர்ந்துள்ளது.
இதில் மாநிலத்துக்கு மாநிலம் இதர வரிகள் உள்ளிட்டவை சேர்க்கப்படும் போது இன்னும் சிறிது அதிகரிக்கும்.
மத்திய அரசிடம் இருந்து நேரடியாக மானியம் பெறும் தொகையும் அதிகரித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் சிலிண்டர் ஒன்றுக்கு மக்களின் வங்கிக்கணக்கில் மத்திய அரசு ரூ.376.60 பைசா டெபாசிட் செய்யப்பட்ட நிலையில், இந்த மாதம் முதல் அந்தத் தொகை ரூ.433.66 ஆக உயர்த்திசெலுத்தப்படும்.
அதேசமயம், மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.60 அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மானியமில்லாத சமையல் சிலிண்டர் விலை டெல்லியில் 939 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 939.50 ரூபாயாகவும், மும்பையில் ரூ.912, சென்னையில் 958 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.