வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், பருவமழை தொடங்க மேலும் தாமதமாகும் என இந்திய வானிலை மையம் கூறி உள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், வடகிழக்கு பருவமழை 5 நாட்களில் தொடங்க வாய்ப்பு உள்ளது.
இதற்கான சாதகமான சூழல், இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் நிலவுவாக கூறி உள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், வடகிழக்கு திசையில் இருந்து மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்தில் பலமான காற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் வீசக்கூடும்.
அக்.,25 ல் தென் தமிழகத்தின் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. 27,27,28 தேதிகளில்மழைக்கு வாய்ப்பு இல்லை.
29 ல் ஒடிசாவின் கடலோர பகுதிகளில் மழை பெய்யக்கூடும். அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் எனக்கூறி உள்ளது.