முக்கிய செய்திகள்

வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை..


அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் வடகிழக்கு பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சென்னை,திருவள்ளுர்,காஞ்சிபுரம் மாவட்டங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப் பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.