முக்கிய செய்திகள்

தனி மாநில கோரி வட கர்நாடக அமைப்பு நடத்திய முழு அடைப்பு போராட்டம் தோல்வி..


தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, வட கர்நாடக அமைப்பு நடத்தி முழு அடைப்பு போராட்டம் தோல்வியை தழுவியுள்ளது.

 

கர்நாடகாவின் வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்த 13 அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. கர்நாடகாவின் தெற்கு பகுதிகள் மட்டுமே வளம் கொழிப்பதாகவும், வடக்கு பகுதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்புகள் குற்றம்சாட்டின.

 

இந்நிலையில் மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னட மொழி அமைப்புகள் எதிர் போராட்டத்தில் குதித்துள்ளன. மேலும் அரசின் நிர்பந்தத்தை தொடர்ந்து, 13 அமைப்புகள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தன.