முக்கிய செய்திகள்

வடமாநிலங்களில் ஏடிஎம்மில் பணம் வராமல் மக்கள் தவிப்பு: 15 நாட்களாக நீடிக்கும் அவலம்..


வடமாநிலங்களில் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மத்தியப்பிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள மக்கள் கூறுகையில், நாங்கள் பண நெருக்கடியில் உள்ளோம், கடந்த 15 நாட்களாக ஏடிஎம்களில் பணம் வராததால் மிகுந்த சிரமத்தில் உள்ளோம்.

இன்று மட்டும் பல ஏடிஎம்களுக்கு சென்று பார்த்தேன், எதிலும் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதேபோல் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தில் உள்ள மக்கள் கூறுகையில், ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாததால் செய்வதறியாது திணறுகிறோம். இன்று காலை முதல் 5 முதல் 6 ஏடிஎம்களுக்கு சென்று பார்த்தேன், எதிலும் பணம் இல்லை. என் குழந்தையை பள்ளியில் சேர்க்க கட்டணம் செலுத்த வேண்டும், மேலும் மளிகை மற்றும் காய்கறிகள் வாங்க வேண்டும். ஆனால் ஏடிஎம்களில் பணம் இல்லாததால் செய்வதறியாமல் திணறுகிறேன் என்று கூறியுள்ளார்.