வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி : வானிலை மையம் ..


வடமேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வடமேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதுபோலேவே கர்நாடகத்தில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.

இதனால் நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

தமிழகம் மற்றும் புச்சேரியில் பொதுவாக லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பொழிவு இருக்கும்.

கடந்த 24 மணநேரத்தை பொறுத்தவரை பொள்ளாச்சியில் அதிகபட்சமாக 10 செ.மீ மழையும், சின்ன கல்லாரில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. வடமேற்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.