வன்முறையைத் தொடர்ந்து இலங்கையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவசியமில்லை என்றால் இலங்கைக்கு செல்தைத் தள்ளிவைக்கும்படி வெளியுறவு அமைச்சகம் சிங்கப்பூர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அத்தியாவசியமில்லை என்றால் இலங்கைக்கு செல்தைத் தள்ளி வைக்கும்படி வெளியுறவு அமைச்சகம் சிங்கப்பூர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் வன்முறை ஏற்பட்டுள்ளதை அடுத்து, வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை (மே 12) அன்று அந்தப் பயண ஆலோசனையை விடுத்துள்ளது.
இலங்கையில் உள்ள சிங்கப்பூரர்களை விழிப்புடன் இருக்கும்படியும் தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான எல்லா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அது அறிவுறுத்தியது.
ஆர்ப்பாட்டங்களும் பெரிய மக்கள் கூட்டமும் இருக்கும் நடக்கும் பொது இடங்களைத் தவிர்க்கும்படியும் வெளியுறவு அமைச்சு கூறியது.
இலங்கையில் பல வாரங்களாக நடந்த அமைதியான ஆர்ப்பாட்டங்கள் கடந்த திங்கட்கிழமை வன்முறைச் சம்பவங்களாக மாறின.
முன்னைய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் அமைதி ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கிய பின்னர், அவர்கள் பதிலுக்குத் தாக்கினர்.
அந்தச் சம்பவங்களில் குறைந்தது எட்டு பேர் இறந்தனர். ஏறத்தாழ 230 பேர் மாண்டனர்.
இலங்கையில் உள்ள சிங்கப்பூரர்கள் நடப்புச்செய்திகளை கூர்ந்து கவனித்து உள்ளூர் அதிகாரிகளின் உத்தரவுகளின்படி நடக்க வேண்டும் என்றும் அமைச்சு கூறியது.
வெளியுறவு அமைச்சில் இன்னமும் மின்பதிவு செய்திருக்காவிட்டால் அவ்வாறு செய்யும்படி அமைச்சு கூறியது. பதிவு செய்ய வேண்டிய முகவரி: https://eregister.mfa.gov.sg/
தூதரக உதவி தேவைப்படுபவர்கள், கொழும்பில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தை நாடலாம். அல்லது வெளியுறவு அமைச்சின் 24 மணிநேர பணி அலுவலகத்தை அழைக்கலாம்.
தொடர்பு விவரங்கள்:
கொழும்பில் உள்ள சிங்கப்பூர் தூதரகம்
தொலைபேசி: +94-11-5577300, +94-11-2304444, +94-11-5577111
மின்னஞ்சல்: nawaloka@slt.lk
வெளியுறவு அமைச்சின் பணி அலுவலகம் (24 மணிநேரம்)
தொலைபேசி: +65 6379 8800 / 8855
மின்னஞ்சல்:: mfa_duty_officer@mfa.gov.sg