முக்கிய செய்திகள்

ஒகி புயல் பாதிப்பு: குமரியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு..


ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பல மீனவர்கள் மாயமானார்கள்.

இந்நிலையில்13 நாட்களுக்குப் பிறகு குமரி மாவட்டத்தை ஆய்வு செய்ய முதல்வர் பழனிசாமி விமானம் மூலம் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வந்தார்.

அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி வந்த முதல்வர் பழனிச்சாமி, கல்படி என்ற இடத்தில் புயலால் சாய்ந்த வாழை மரங்கள் உள்ளிட்ட பயிர்பாதிப்புகளை ஆய்வு செய்தார்.