தமிழகம்,புதுவையில் 30, 31-ந் தேதிகளில் மழை அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் ..

தமிழகம்,புதுவைவில் வரும் 30, 31-ந் தேதிகளில் வடகிழக்கு பருவ மழையின் வேகம் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விட்டு விட்டு மிதமான மழை பெய்யவாயப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.
வழக்கமாக நமது நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20-ம் தேதி துவங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு ஒருவார காலம் தாமதமாக அக்டோபர் 26-ம் தேதி தான் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இருப்பினும் வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடையவில்லை. இதற்கு தென் சீன கடலில் ஏற்பட்டுள்ள ஸவ்லா புயலே காரணம் என நாசா கண்டறிந்துள்ளது. இந்தியாவின் கிழக்கு பகுதியில் உள்ள தென் சீன கடலில், பிலிப்பைன்ஸ் அருகே ஸவ்லா என்ற புயல் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த புயலானது வரும் நவம்பர் 1-ல் ஜப்பானை தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஸவ்லா புயலானது இந்திய பெருங்கடலின் ஈரப்பதத்தை ஈர்த்து தீவிரமடைந்து வருகிறது. இதனால் கிழக்கு திசையிலிருந்து, தமிழகத்திற்கு ஈரப்பதம் எடுத்து வரும் காற்றின் வேகம் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடையாமல் உள்ளதாக நாசாத குறிப்பிட்டுள்ளது. ஸவ்லா புயல் கரை கடந்த பின், இந்தோனேஷியா அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும். பின் அது, நவம்பர் முதல் வாரத்தில், அந்தமான் வழியாக இந்திய கடற்பரப்பை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு தான் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.