முக்கிய செய்திகள்

அக்.31-க்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதி : மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..

தமிழகத்தில் வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்கவேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கின் விசாரணையின் போது மாநில தேர்தல் ஆணையம் அக்டோர் வரை தேர்தலை நடத்த அவகாசம் கோரியது.

இதனை மனுதாரர் எதிர்த்து வாதாடினார். இந்நிலையில் அக்டோபர் 31-ம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்கவேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது