முக்கிய செய்திகள்

அய்யோ பாவம் ராகுல் காந்தி….!

மோடி அரசின் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மான விவாதத்தின்போது பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி ஆற்றிய உரையைப் பாராட்டாதவர்களே இல்லை.

ராகுலின் இந்தி உரையை நக்கீரன் உட்பட பல ஊடகங்கள் தமிழாக்கம் செய்து வெளியிட்டன. காங்கிரஸ் அரசியல்  வரலாற்றின் முக்கிய பேச்சாக கருதப்படும் ராகுலின் முழுமையான பேச்சு, தமிழில் அச்சு வடிவில் வெளிவந்ததாகத் தெரியவில்லை.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைமையகத்தில் கேட்டபோது , கட்சியின் தலைவர் திருநாவுக்கரசு தனிச்செயலர் ஸ்ரீதரிடம் பேசச்சொன்னார்கள். ஸ்ரீதர், மீடியா இன்சார்ஜ் பிரவீனிடம் பேசச்சொன்னார். பிரவீன் மலையாளம் கலந்த தமிழில் சொன்ன பதில்….

” ராகுல் 29 நிமிடம் பேசியல்லோ…அவ்வளவு ஸ்பீடா தமிழில் டிரான்ஸ்லேட் செய்ய இயலாது. முக்கிய பாயின்ட் வேணா அனுப்பலாம். சரியோ ? “

“முக்கிய பாயின்ட் எல்லா பத்திரிகையிலும் வந்தல்லோ ” என்று நாம் பதில் சொன்னோம்.

மோடியின் பேச்சை முழுமையாக வெளியிட்ட ஊடகங்கள், திட்டமிட்டு ராகுல் பேச்சை தவிர்த்தன.

ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிடமே ராகுல் பேச்சின் தமிழ் அச்சு வடிவம் இல்லை என்பதுதான் காலக்கொடுமை.

அய்யோ பாவம் ராகுல்….

 

– எழில்

– Oh pity Rahul

முகநூல் பதிவில் இருந்து…