வேணாம்… இது நல்லா இல்லே…: எண்ணெய் வள நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்!

பெட்ரோல், டீசலின் விலை உயர்வுக்காக OPEC (Organization of the Petroleum Exporting Countries ) அமைப்பில் உறுப்பினராக உள்ள எண்ணெய்வள நாடுகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளார். கச்சா எண்ணெய் விலையை செயற்கையாக அந்த நாடுகள் உயர்த்தி வருவதாகவும், அதை ஏற்க முடியாது என்றும் தமது ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் கொந்தளித்துள்ளார்.

அல்ஜீரியா, அங்கோலா, ஈக்வேடார், ஈக்வேடானில் கினியா, ஈரான், ஈராக், கேபோன், லிபியா, நைஜீரியா, கட்டா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், வெனிசுலா ஆகிய 14 நாடுகளைக் கொண்ட OPEC அமைப்பு சர்வதேச கச்சா எண்ணெயின் விலையை நிர்ணயித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவைப் போலவே, பெட்ரோல், டீசல் விலையின் கடும் உயர்வு அமெரிக்காவையும் கலங்கச் செய்திருக்கிறது.

இதுகுறித்து ட்விட்டரில் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், போதுமான அளவு கச்சா எண்ணெய் இருப்பில் உள்ள நிலையிலும், OPEC நாடுகள் எண்ணெய் விலையை செயற்கையாக உயர்த்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். OPEC நாடுகள் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ட்விட்டரில் வலியுறுத்தியுள்ள ட்ரம்ப், இந்த விலை உயர்வு நல்லதும் இல்லை, ஏற்கவும் முடியாது என கடுமையாக எச்சரித்திருக்கிறார் ட்ரம்ப்.

Oil Prices: Trump Slams OPEC Countries

 

ஜூன் 7ல் திரைக்கு வரும் “காலா”

கி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)

Recent Posts