முக்கிய செய்திகள்

ஓகி புயல் தொடர் கனமழை: சென்னை உட்பட 15 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..


ஓகி புயலால் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, விழுப்புரம், மதுரை உட்பட 15 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (டிச.,01) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று மதியம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘ஓகி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது கன்னியாகுமரிக்கு தெற்கே இந்தியப் பெருங்கடலில் 70 கிமீ தொலைவில் மையம் கொண்டது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. புயல் காரணமாக கடல் பகுதியில் இருந்து தரையை நோக்கி மணிக்கு 55 கிமீ முதல் 65 கிமீ வேகத்தில் காற்று வீசியது.

இந்த புயலால், கன்னியாகுமரி மாவட்டமே சீர்குலைந்தது. சாலைகளில் மரம், மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. பலத்த மழைக்கு குமரியில் பெண் உட்பட 4 பேரும், நெல்லையில் ஒருவரும் பலியானார்கள். இதனால் மின்சாரம் கடந்த 2 நாட்களாக துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாமலும், குடிநீர் கிடைக்காமலும் மக்கள் கஷ்டப்படுகின்றனர். காற்று வேகமாக வீசியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மாணவர்கள் நலன்கருதி, சென்னை,தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, விழுப்புரம், மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய தாலுகாகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நெல்லை – குமரி சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கனமழை காரணமாக செங்கோட்டை புளியரை வாகனசாவடியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. ஓகி புயலின் காரணமாக சென்னை மயிலாப்பூர், கிண்டி, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. இதேபோல் புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் மதுரை வாடிப்பட்டி பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

இதற்கிடையே திண்டுக்கல், சிவகங்கை , நீலகிரி, காஞ்சிபுரம், சேலம் , திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் லதா உத்தரவிட்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டார்.

கனமழை காரணமாக சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, இளையான்குடி, திருபுவனம் தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நீலகிரியில் குன்னூர், உதகை, கோத்தகிரி, குந்தா பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே திண்டுக்கல், சிவகங்கை , நீலகிரி, காஞ்சிபுரம், சேலம் , திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் லதா உத்தரவிட்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டார்.

கனமழை காரணமாக சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, இளையான்குடி, திருபுவனம் தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நீலகிரியில் குன்னூர், உதகை, கோத்தகிரி, குந்தா பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக திருவள்ளுர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.