திருச்சியில் அனைத்து வசதிகளுடன்கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு அளவிலான போட்டிகளுக்கு தமிழக இளைஞர்கள் தயாராக ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படும்.
தரம் வாய்ந்த பயிற்சி வழங்கக்கூடிய வகையில் தமிழ்நாட்டில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்பட உள்ளன என்று முதல்வர் தெரிவித்தார்
பெண்கள் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் முதல்முறையாக மகளிர் சுயஉதவி குழுக்கள் அமைத்தவர் கலைஞர். பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை. தமிழ்நாட்டில் 4,38,000 மகளிர் சுயஉதவி குழுக்கள் உள்ளன.
50,24,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க முதல்முறையாக முனைப்பு காட்டியது திமுக அரசுதான் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.