
புதியதாக உருமாறிய ஒமைக்ரான் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது உத்தர பிரதேச அரசு.
ஒமைக்ரான் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இதனால் மாநில அரசு முதலமைச்சர்கள் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த வருடம் தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் கூட்டங்கள் அதிக அளவில் நடைபெறும். இது கொரோனா அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்து விடக்கூடாது என்பதால், அலகாபாத் நீதிமன்றம் தேர்தலை தள்ளிவைக்க ஏற்பாடு செய்யுமாறு தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், தேர்தல் பிரசார கூட்டத்தில் மக்கள் கூடுவதை தடை செய்ய பிரதமர் மோடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.