முக்கிய செய்திகள்

‘ஒரே நாடு; ஒரே ரேசன்’ திட்டம்: ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் : தினகரன்..

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தால் தமிழகத்தில் பொது வினியோக திட்டம் முற்றிலும் சீர்குலையும் ஆபத்து உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், வெளி மாநிலங்களில் இருந்து இங்கே குவிந்திருக்கும் தொழிலாளர்களுக்கு ரேசன் பொருள்களில் கணிசமாக பகுதியை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டால் தமிழக மக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.

இந்த திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் எனவும் தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

டிடிவி தினகரன் டுவிட்டரில் கூறியதாவது:-

‘ஒரே நாடு; ஒரே ரேசன்’ திட்டத்தால் தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் முற்றிலுமாக சீர்குலைந்துவிடும் ஆபத்து: ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்