முக்கிய செய்திகள்

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் ஒத்தி வைப்பு: அமைச்சர் காமராஜ் அறிவிப்பு..

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதாலும் ஏப்ரல் மாதம் தமிழக முதல்வர் அறிவித்துள்ள நிவாரண தொகை மற்றும் இலவச பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளதாலும்

குழப்பம் ஏற்படும் என்பதால் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.