முக்கிய செய்திகள்

வெங்காய ஏற்றுமதிக்கான மானியம் 10 சதவிகிதமாக உயர்வு..

நாடு முழுவதும் வெங்காய விளைச்சல் அதிகரித்துள்ளதால் சந்தைக்கு அதிகளவு வெங்காயம் வந்து கொண்டள்ளது. இதனால் வெங்காய விலை வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது.

இந்நிலையில் மத்திய அமைச்சரவை வெங்காய ஏற்றுமதியை ஊக்குவிக்க ஏற்றுமதிக்கான 5 சதவிகித மானியத்தை 10 சதவிகிதமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

இதனால் வெங்காய உற்பத்தியாளர்கள் பாதிப்பிலிருந்து மீள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.