ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் இதுவரை 10 பேர் தற்கொலை செய்து கொண்டள்ளனர். இளைஞர்களை காவு வாங்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடைவிதிக்க வலியுறுத்தி அரசியல் கட்சிகள் தன்னார்வ அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முகமது ரஃபி என்பவர் ஆன்லைன் சூதாட்டத்ததை தடைவிதிக்க வேண்டும் என்றும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மனு செய்துள்ளார்.
இந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்தள்ளது.
