முக்கிய செய்திகள்

ஆடம்பரம் இல்லாமல் ..: 18 ஆயிரம் ரூபாயில் மகனின் திருமணத்தை முடித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி..

ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தனது மகனின் திருமணத்தை வெறும் 18 ஆயிரத்தில் நடத்தி முடித்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

பொதுவாகவே கல்யாணம் என்றால் லட்சக்கணக்கில் செலவாகும். அதுவும் பிரபலங்களின் திருமணம் என்றால் கோடிக்கணக்கில் செலவாகும்.

பத்திரிக்கை, துணி, நகை, மண்டபம், சாப்பாடு என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்லும்.
அப்படி இருக்க ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மெட்ரோபாலிட்டன் மேம்பாட்டு ஆணையராக உள்ள பசந்த் குமார் என்ற ஐஏஸ் அதிகாரி

தனது மகனின் திருமணத்தை வெறும் 36 ஆயிரத்தில் நடத்தி முடித்து உள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

திருமண பத்திரிக்கை முதல் சாப்பாடு துணிமணி வரை அனைத்துமே குறைந்த செலவில் முடித்து உள்ளார்.

செலான 36 ஆயிரம் ரூபாயில் 18 ஆயிரம் மாப்பிள்ளை வீட்டாரும் 18 ஆயிரம் பெண் வீட்டாரும் பங்கிட்டு கொண்டார்களாம்.

பசந்த் குமார் அளித்த பத்திரிக்கையில் ஆசிர்வாதம் மட்டும் போதும். பொக்கே வேண்டாம், பரிசு பொருட்கள் வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.